Translate

இந்த வலைப்பதிவில் தேடு

மகனின் வாழ்வை நினைத்து கவலை.. கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு

ஒசூர் அருகே கணவன் - மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், இருவரின் உடலையும் கைப்பற்றி நகர போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, இராயக்கோட்டை அட்கோ பகுதியில் வசித்து வருபவர் மாதேஸ்வரன்(56). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி(42) என்கிற மனைவியும் சரண்யா(24), பிரித்வி(21) ஆகிய பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மகளை திருமணம் செய்து வைத்த பெற்றோர், மகனுடன் வசித்து வந்துள்ளனர். மகனுக்கு சரியான வேலையில்லை என சொல்லப்படுகிறது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எதுவும் செய்யாமல் தற்போது உதவிட கூட முடியவில்லை என மனஅழுத்தத்தில், அவ்வப்போது பெற்றோர் வருந்தி வந்ததாக சொல்லப்படுகிறது

image

நேற்றிரவு மகனுடன் பெற்றோர் ஒன்றாக உணவு அருந்தி உறங்கசென்ற நிலையில், இன்று காலை நீண்டநேரமாக பெற்றோர் எழாததால் மகன் பிருத்வி எழுப்பியபோது உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

image

பின்னர் ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் அளித்தப்போது நேரில் விசாரணை மேற்க்கொண்டதில் கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

image

உயிரிழந்த தம்பதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/152592/Son-unemployed-unable-to-help-him-A-tragic-decision-taken-by-parents.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post