Translate

இந்த வலைப்பதிவில் தேடு

விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - வியாபாரிகள் மகிழ்ச்சி

ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அருவியில் குளித்தும், பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக உள்ளது.  இதனால் இன்று  ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். 
image
ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. இன்று சுற்றுலாப் பயணிகள் விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைகட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை தொழிலாக நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/152591/Tourists-crowded-in-Hogenakkal-on-holiday.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post