Translate

இந்த வலைப்பதிவில் தேடு

மூத்த ராணுவ வீரரை சரமாரியாக தாக்கி பணம், செல்போன் பறிப்பு - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

மிதிவண்டியில் சென்ற ஓய்வுப் பெற்ற ராணுவ வீரரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அடுத்த ஆவாரம்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் கேப்டன் பூங்காவனம். இவர் (26.08.2022) இன்று மாலை தனது மிதிவண்டியில் சேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் அதிரடியாக பூங்காவனத்தை கீழே தள்ளி தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

image

இதில் பூங்காவனத்தின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

முக்கிய சாலையில் ஓய்வுப் பெற்ற ராணுவ வீரரை தாக்கி இளைஞர்கள் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/146109/Vellore-Attack-on-a-senior-army-man-and-confiscate-his-mobile-phone-Police-investigation.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post