Translate

இந்த வலைப்பதிவில் தேடு

திண்டுக்கல்: குடும்பத் தகராறில் தந்தையால் மகனுக்கு நேர்ந்த பரிதாபம்

நிலக்கோட்டை அருகே தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்ட சம்பவத்தில் மகன் படுகொலை தந்தை படுகாயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே என்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி இவரது 6வது மகன் அஜித் குமார் ஆகிய இருவரும் குடுகுடுப்பை ஜோசியம் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் குமாருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் அந்தோணிக்கும் அஜித் குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

image

இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்தோணியிடம் அஜித் குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்குமார் அந்தோணியை சரமாறியாக குத்தியுள்ளார். இதில், சுதாரித்துக் கொண்ட அந்தோணி அஜித்குமார் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அதே வேகத்தில் அஜித் குமாரை குத்தியுள்ளார். இதில், அஜித் குமார் சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து அஜித்குமார் குத்தியத்தில் படுகாயம் அடைந்த அந்தோணியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார் கொலை சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/146108/Dindigul-Pity-caused-by-father-to-son-in-family-dispute.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post