Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகைகள் மாயமானதாக புகார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த நகைகள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

ஆந்த புகாரில் தனது தங்கை திருமணத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்றுமுறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என்றும் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வீடு மற்றும் நடிகர் தனுஷ் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு என அந்த லாக்கரை மாறி மாறி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

image

அந்த லாக்கரில் இருந்த வைர நகைகள், தங்க நகைகள் நவரத்தின கல் என சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாகவும் இதன் மதிப்பு 3.6 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ள அவர், நகைகளை இந்த லாக்கரில் வைத்திருப்பது தங்கள் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தேனாம்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/157135/Aishwarya-Rajinikanths-jewelery-kept-in-her-locker-is-missing-.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post