Translate

இந்த வலைப்பதிவில் தேடு

நாகை: பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாகை அருகே டாஸ்மாக்கில் ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபரை, தட்டி கேட்ட பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். நேற்று மதியம் தேவூர் டாஸ்மாக் கடைக்கு புகழேந்திரன், அஜித் ஆகிய இருவர் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு கத்தியைக் காட்டி மதுபானம் கேட்டு அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த பாஸ்கர், இவர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

image

இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த புகழேந்திரன் மற்றும் அஜித், மது போதையில் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்ததின் பேரில், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் இன்று அதிகாலை கீழ்வேளூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/157397/Petrol-bomb-hurled-at-bar-owner-s-house.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post