Translate

இந்த வலைப்பதிவில் தேடு

சேப்பாக்கம்: முக்கிய கேலரிகளில் அனுமதியில்லை? சி.எஸ்.கே அணிக்கு ரசிகர்கள் கண்டனம்!

சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள முக்கிய கேலரிகளில் ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை இல்லை என்பதால் சமூக வலைதளங்களில் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2019ஆம் ஆண்டுக்கு பிறகு, மீண்டும் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில்தான் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன், எம்.சி.சி பெவிலியன் சேர்த்து மொத்தம் 11 கேலரிகள் உள்ளன. எம்.சி.சி பெவிலியனை பொறுத்தவரை எப்போதும் அது முழுக்க மெட்ராஸ் கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனை தவிர 10 கேலரிகளிலும் கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக ரசிகர்கள் போட்டிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

image

ஆனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில் மைதானத்தின் இரண்டு பக்கங்களில் உள்ள C, D, E மற்றும் I, J, K என வெறும் 6 கேலரிகளில் மட்டுமே ரசிகர்கள் டிக்கெட் வாங்க அனுமதி வழங்கிவிட்டு, மைதானத்திற்கு நேராக இருக்கக் கூடிய H, G மற்றும் F கேலரிகளில் ஒரு டிக்கெட் கூட ரசிகர்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது. அதேபோல C கேலரியில் உள்ள UPPER கேலரியிலும் டிக்கெட் வாங்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

போட்டி நடைபெறும் பிட்ச்-க்கு நேராக உள்ள கேலரிகளில் ‘டிக்கெட் விலை அதிகமாக நிர்ணயம் செய்தாலும், அதனை ரசிகர்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கூட வழங்கப்படாமல் இருப்பது ஏன்’ என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பும் ரசிகர்கள், ‘ANBUDEN என சமூக வலைதளங்களில் Hashtag போடும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், கிட்டத்தட்ட 15 ஆயிரம் டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கவே அனுமதிக்காமல் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/157480/No-ticket-sales-for-fans-at-major-Chepakkam-galleries.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post