Translate

இந்த வலைப்பதிவில் தேடு

நாகப்பட்டினம்: ஆட்சியர் பங்குபெற்ற அரசு விழாவில் பள்ளி மாணவர்களை டீ வாங்க அனுப்பிய அவலம்!

நாகை அருகே வடக்கு பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு, டீ வாங்க பள்ளி மாணவர்களை கடைக்கு அனுப்பியதால் சர்ச்சை எற்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க அறக்கட்டளை சார்பில் 10 வகையான நிபந்தனைகளுடன் பசுமையான - தூய்மையான பள்ளி தேர்வுக்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு பள்ளியில் இன்று நடைபெற்றது.

image

இதில், பசுமையான தூய்மையான பள்ளியாக தேர்வான வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது மற்றும் ரூ.10,000-க்கான காசோலையும் திருமருகல் ஊராட்சி ஒன்றியம், கீழ தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு விருது மற்றும் ரூ.5,000-க்கான காசோலையும் வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.

image

இந்த விழாவிற்கு ஆட்சியர் வருவதற்கு முன்பாக விருந்தினருக்கு தேநீர் வழங்குவதற்காக 3 மாணவர்களை பள்ளி நேரத்தில் பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்தின் செயலை கண்ட சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர். பள்ளி நேரத்தில் பிற வேலைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என்று இருந்தும் எப்படி தேநீர் வாங்க மாணவர்களை பயன்படுத்திகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளர். பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/157355/Nagapattinam-Avalam-sent-school-students-to-buy-tea-at-a-government-function.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post