
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் முடிந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணப்படுகிறது. பிறகு 8.30 க்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். நாளை காலை 8 மணி வரைக்கும் தபால் வாக்குகள் பெறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இந்த முறை முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நேரடியாக வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதை தபால் வாக்காக கருத்தில் கொள்ளப்படும்.
16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்தோடு பகுதியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. காவல்துறை, துணை ராணுவம் உள்பட 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/156201/The-counting-of-votes-for-the-Erode-East-assembly-constituency-by-election-will-begin-tomorrow-morning-.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post