
மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45) டிரைவர் கதிர் (47) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார், படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மாத்தூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/157252/Trichy-Cars-collide-head-on-3-killed-in-road-accident.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post