Translate

இந்த வலைப்பதிவில் தேடு

நாமக்கல்: மூன்று தட்டு பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை தட்டித் தூக்கிய இளைஞர்

நாமக்கல்லில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் 3 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞர் 5 ஆயிரம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார்.

நாமக்கல் - மோகனூர் சாலையில், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் காலித் என்ற பிரபல பிரியாணி கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று அதிக அளவில் பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டி நடைபெற்றது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ. 5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

image

இந்நிலையில், போட்டியில் கலந்துகொள்ள 100-க்கும் மேற்பட்ட பதிவு செய்ததை அடுத்து 35 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஒரே அறையில் அமர வைக்கப்பட்டு அனைவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. இதில், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ள சரவணன் என்பவர் (மூன்று தட்டுக்கள் (2.700 கிலோ) பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசாக  5001 ரூபாயை தட்டிச் சென்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/154954/Namakkal-The-youth-who-won-the-first-prize-by-eating-three-plates-of-biryani.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post