Translate

இந்த வலைப்பதிவில் தேடு

மூதாட்டி கொலைவழக்கில் திடீர் திருப்பம்: போலீசார் விசாரணையில் சிக்கிய நபரும் அவரது நாடகமும்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆயுதப்படை காவலர் நகைக்காக கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதம்மாள் (76). இவருக்கு ஒரு மகனும், மூன்று மகளும் உள்ளனர். இவர்கள் நால்வருமே தங்களது குடும்பத்தாருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மூதாட்டி யசோத்தம்மாள் மேலேறி கிராமத்திலேயே தனியாக தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி பக்கத்து வீட்டாரோடு பேசிட்டு தூங்கச் சென்றார். இதையடுத்து 29 ஆம் தேதி மறுநாள் பிற்பகல் ஆகியும் மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் மூதாட்டி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

image

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டியின் வீட்டிலிருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது, இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கர்களை வரவழைத்த போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்திரவிட்டிருந்தார். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியின் பேரன் முறையான சென்னை ஆயுதப்படை காவலராக இருந்துவரும் சதீஷ் (எ) சக்திவேல் என்பவர் தான் யசோதம்மாள் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

image

இதையடுத்து நகைக்காகதான் கொலை செய்துள்ளார் என்பதும் உறுதியாகியிருக்கிறது. இக்கொலை சம்பவத்தில் இவருடன் வேறு யாரேனும் தொடர்பு உள்ளதா எனவும் தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று கொலையாளியான சதிஷ் (எ) சக்திவேல், பிரேதத்தை சுற்றி சுற்றி வந்து யாரோ கொலை செய்து விட்டதை போன்று நாடகமாடி பவளா காட்டியதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/155044/Sudden-twist-in-old-womans-murder-case-Armed-forces-police-caught-up-in-police-investigation.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post