Translate

இந்த வலைப்பதிவில் தேடு

சென்னை: நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்த போது நிகழ்ந்த விபரீதம் - இரு கைகளை இழந்த ரவடி!

அம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்தத்தில் ரவுடி ஒருவர் இரண்டு கைகளையும் இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடி விபத்து மற்றும் சதி திட்டம் குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த சென்னையின் பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

image

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஜயகுமாரை சந்திக்கவும், நாய் வாங்குவதற்காகவும் அம்பத்தூர் ஒரகடம் பகுதிக்கு வந்த ஓட்டேரி கார்த்தி, விஜயகுமார் வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஓட்டேரி கார்த்திக்கின் இரு கைகள் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்,

image

இதையடுத்து நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரு கைகளும் மணிகட்டு வரை உடைந்து சிதறிபோனது, ஒரு காலில் முறிவு ஏற்பட்டதோடு முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் இரு கைகளும் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக துக்க நிகழ்வு ஒன்றில் பட்டாசு வெடித்தபோது விபத்து ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்கள் கழித்து இன்று சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

இதைத் தொடர்ந்து ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்தி, யாரையாவது கொலை செய்ய சதி திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டு தயாரித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதற்கிடையில் இவனது கூட்டாளியான விஜயகுமாரை தற்போது காவல் நிலையம் அழைத்து வந்து ஏதேனும் சதி திட்டம் குறித்து விவரங்கள் தெரிகின்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அருகே நாட்டு வெடிகுணடு வெடித்த சம்பவத்தில் ரவுடி ஒருவருக்கு இரு கைகள் உடைந்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/155047/CHENNAI-A-famous-Rowdi-lost-both-hands-in-an-accident-while-making-a-bomb.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post