Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது - டி.டி.வி.தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்... ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இடைத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

image

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பது போல் என்றவர் தொடர்ந்து.... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வென்றது போன்ற பலத்துடன் தான் இப்போதும் நாங்கள் இருக்கின்றோம்,

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் எங்களை வெற்றி அடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/154410/I-am-likely-to-contest-Erode-East-Constituency-by-elections-TTV-Dinakaran.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post