Translate

இந்த வலைப்பதிவில் தேடு

அவதார் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்

அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் போன்று வேடமிட்டு நடித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது, 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்ட இந்த விழாவில் மாணவ மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன, இதில், அவதார் பட காட்சிகளை முப்பரிமான தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

image

அதேபோல், மாற்று எரிபொருள் தேவையை உணர்த்தும் வகையில் ஆத்விக் என்ற ஐந்து வயது சிறுவன் மின்சார வாகனத்தை மேடையில் இயக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரின கவனத்தை ஈர்த்தது. தொழிற்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/154700/Students-dressed-up-as-avatar-characters-and-created-environmental-awareness.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post