Translate

இந்த வலைப்பதிவில் தேடு

தொடரும் அகதிகள் வருகை: இலங்கையைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சம்

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 212 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த பாரதி டிஸ், அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்துள்ளனர்.

image

இதையடுத்து தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார், இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் நிழவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/154369/Refugee-influx-continues-5-Sri-Lankans-take-refuge-in-Tamil-Nadu.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post