Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஷார்ஜா டூ கோவை: 3.54 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோவை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.54 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, அந்த 6 பேரும் தங்களது பேண்ட், உள்ளாடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

image

இதையடுத்து ஆபரணங்கள் மற்றும் கட்டியாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிவகங்கையைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் கைது செய்தனர். ரூ.2.05 கோடி மதிப்புள்ள 3.54 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/153661/Sharjah-to-Coimbatore-3-54-kg-smuggled-gold-seized-Do-you-know-the-value.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post