Translate

இந்த வலைப்பதிவில் தேடு

அரியலூர்: தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பேருந்து இன்று காலை புறப்பட்டது. பேருந்து செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியதால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்தோர் 20 பேர் காயமடைந்தனர்.

image

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். இதில் கார்த்திக் என்ற கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்த சூழ்நிலையில் இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்விபத்தில் காயமடைந்த 20 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/154745/A-college-student-tragically-died-when-a-private-bus-overturned-in-an-accident-in-Ariyalur-district.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post