Translate

இந்த வலைப்பதிவில் தேடு

விபத்தில் சிக்கிய அரசு ஊழியரை வேடிக்கை பார்த்த மற்றொரு அரசு ஊழியரும் பலி

போரூர் அருகே நின்றிருந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழப்பு விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்ற மற்றொரு அரசு ஊழியரும் உயிரிழந்தார்

சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் யோவான் (52), தாம்பரம் மாநகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர், வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார், அப்போது தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் போரூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து யோவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த யோவான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாம்பரம் அடுத்த படப்பை, சக்தி நகரைச் சேர்ந்த தங்கராஜ் (58), என்பவர், கெல்லிஸ் மின்வாரிய அலுவலகத்தில் வேலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்து நடந்த பகுதியில் போலீஸ் நின்று கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடி சென்றவர் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சாலையின் எதிர் திசையில் உயிரிழந்த தங்கராஜ் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த இரு சம்பவங்களும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/151945/Another-government-employee-who-happened-to-be-joking-with-the-government-employee-who-was-involved-in-the-accident-was-also-killed.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post