Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: இருவர் பலி

சாத்தூர் அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

சிவகாசியில் இருந்து திருச்செந்தூருக்கு 50-க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை சென்றுள்ளனர். அப்போது மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் புல்வாய்ப்பட்டி அருகே பாதயாத்திரை சென்றபோது, பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சங்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

image

இதையடுத்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயராம் என்பவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/153044/An-unidentified-vehicle-collided-with-pilgrims-two-killed.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post