Translate

இந்த வலைப்பதிவில் தேடு

நகைக் கடையில் துளையிட்டு கொள்ளை முயற்சி: அலாரம் அடித்ததால் தப்பிய நகைகள்

ஈரோடு அருகே நகைக்கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை குன்னத்தூர் நால்ரோட்டில் பரமசிவம் என்பவருக்குச் சொந்தமான நகை கடை செயல்பட்டு வருகிறது. நகைக் கடையில் இன்று அதிகாலை அலாரம் அடித்துள்ளது. இதுகுறித்து காவலாளி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

image

அப்போது கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்ததது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் நகைக் கடையின் அருகில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் சென்று நகைக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்தபோது அலாரம் அடித்ததால் மர்ம நபர்கள் தப்பியோடியது தெரியவந்தது.

image

நகைக் கடையில் உள்ள அலாரம் அடித்ததால் பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் தப்பியது. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ள இந்த கொள்ளை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/152989/Attempted-burglary-at-jewellers-shop-Jewels-escaped-as-alarm-sounded.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post