Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பொள்ளாச்சி: முட்புதரில் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்; பாலியல் வன்கொடுமையா?

பொள்ளாச்சி அருகே முட்புதரில் ரத்தக் காயங்களுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவருக்கு நாகவேணி (46) என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நாகவேணி, தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக புதுப்பாளையம் பகுதிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். நேற்று வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் மாடுகள் மட்டும் வீட்டுக்கு சென்றுள்ளன.

image

இதையடுத்து அவரது உறவினர்கள் நாகவேணியை தேடிச் சென்றனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த முட்புதரில் ரத்த காயங்களுடன் நாகவேணி சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

image

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சம்பவம் நடந்தது திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதி என்றாலும், இரு மாவட்ட போலீசாரும் இணைந்து ஆறு தனிப்படை அமைத்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார். பெண் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை தரப்பில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/151629/Woman-found-dead-in-Pollachi.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post