Translate

இந்த வலைப்பதிவில் தேடு

திருநள்ளாறு: 4 கால்களுடன் பிறந்த கோழி! வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்!

திருநள்ளாற்றில் நான்கு கால்களுடன் பிறந்துள்ள அதிசயமான கோழிக்குஞ்சை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் பூமங்களம் கிராமத்தை சேர்ந்த சக்தி முருகன் என்பவரின் வீட்டில் வளர்த்து வரும் கோழி, சில தினங்களுக்கு முன் 10க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகளை ஈன்றுள்ளது. அந்த 10-ற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சிகளில் ஒரு கோழிக்குஞ்சு மிகவும் சுறுசுறுப்பாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது.

image

இந்த நிலையில் அதனை உற்று நோக்கிய போது, அந்த கோழி குஞ்சிக்கு நான்கு கால்கள் இருந்ததை கண்டு கோழி வளர்த்து வரும் சக்தி முருகன் குடும்பத்தினர் வியப்படைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியவர, அந்த அதிசயமான நான்கு கால் கொண்ட கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் ஊர்மக்கள்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/151355/Tirunallaru--Chicken-born-with-4-legs--People-watching-in-amazement-.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post