
சிவகங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையதாக ஒருவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் கல்லூரி எதிரில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். இவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்று வந்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையதாகவும் கூறப்படும் நிலையில், இன்று இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் 3 பேர் நிடீர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், விக்னேஷ்வரன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என தகவல் வெளியான நிலையில், அந்த தகவலை நாம் தமிழர் கட்சியினர் மறுத்துள்ளனர். மேலும், விக்னேஸ்வரன் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும், எப்படி நாம் தமிழர் கட்சி என்று தகவல் வெளியானது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148679/Related-to-banned-movement-NIA-raid-in-Sivagangai.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post