Translate

இந்த வலைப்பதிவில் தேடு

மக்கள் ஓசில போகல: பலமுறை சொல்லியும் பலனில்ல – புலம்பும் நடத்துனர் ஏன் தெரியுமா?

பேருந்துக்குள் மழை பெய்ததால் நின்று கொண்டே பயணித்த பயணிகள். மக்கள் ஓசியில் பயணிக்கவில்லை பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை என புலம்பிய அரசு பேருந்து நடத்துனர் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு பசுவந்தனையில் இருந்து தினமும் இரவில் அரசு பேருந்து சென்று வருவது வழக்கம். வழக்கம்போல் நேற்றிரவும் அந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்நிலையில், பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்ததால் அரசு பேருந்து மேற்கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாக மழைநீர் பேருந்துக்குள் விழுந்துள்ளது.

image

இதையடுத்து; பேருந்தில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியமால் நின்று கொண்டே பயணித்து வந்தனர். மக்கள் யாரும் ஓசியில் வரவில்லை, பலமுறை சொல்லியும் மேற்கூரையில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அரசு பேருந்தின் நடத்துனர் புலம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/149685/Do-you-know-why-the-lamenting-conductor-doesnt-work-after-saying-it-many-times.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post