Translate

இந்த வலைப்பதிவில் தேடு

தேனி: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த வெறி நாய்கள் - பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

இரண்டு வெறி நாய்கள் பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்ததில் 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப் பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில்லுக்குள் புகுந்த நாய் ஒன்று கண்ணில் கண்டவர்களை எல்லாம் துரத்தித் துரத்தி கடிக்கத் துவங்கியது. மற்றொரு நாய் அந்தப் பகுதியின் சாலையில் சென்றவர்களை கடித்ததில் மொத்தம் 20 பேர் காயமடைந்தனர்.

image

இந்நிலையில், நாய் கடித்து காயம் அடைந்தவர்கள் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தித் துரத்தி கடிக்கும் வெறி நாயை கம்பிகளால் கட்டி பிடித்த நிலையில், மற்றொரு வெறிநாயை தேடி வருகின்றனர்.

image

இதைத் தொடர்ந்து வெறிநாய் பொது மக்களை விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/149839/Theni-dogs-chase-away-and-bite-public-Shocking-CCTV-footage.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post