
ஈரோட்டில் மீனவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாத்தா மற்றும் பேரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொட்டாம்பட்டியை சேர்ந்த மீனவரான கனேஷன் என்பவரை அவரது உறவினர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அந்தக் கொலை தொடர்பாக நேற்று மாதேஷ் என்பவரை கைது செய்த நிலையில், அவரது தந்தை முத்துப்பாண்டி மற்றம் மாதேஷின் மகன் சித்தீஸை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த தாத்தா முத்துப்பாண்டி மற்றும் பேரன் சித்தீஸ் ஆகிய இருவரையும் கைது செய்து தற்போது சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலம் தொடர்பான வழக்கு தொடர்பாக கணேஷன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த தாத்தா முத்துப்பாண்டி, மகன் முகேஷ் மற்றும் பேரன் சித்தீஸ் ஆகிய மூவரும் கணேஷனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து தாத்தா மற்றும் பேரனை போலீசார் சிறையில் அடைத்தனர். நிலத்திற்காக உறவினரை கொலை செய்து தாத்தா, மகன் மற்றும் பேரன் சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148622/Erode--3-generations-of-same-family-arrested-for-killing-fisherman-due-to-land-dispute-.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post