Translate

இந்த வலைப்பதிவில் தேடு

16-வது நாளாக தொடரும் பெரம்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்

பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின்  போராட்டம் 16ஆவது நாளாக நீடித்து வருகிறது.

முன்னறிவிப்பின்றி 28 பேரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

image

இதனிடையே இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஊழியர்களின் போராட்டத்தை வீடியோ மூலம் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது தொடர்பாக காவல்துறையினர் தங்களிடம் பேசியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/149235/Perambalur-toll-booth-workers-strike-continues-for-16th-day.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post