Translate

இந்த வலைப்பதிவில் தேடு

சிக்னல் கோளாறு: சென்னை அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள்; ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை அதிபர் ரயில் திருவலாங்காடு ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை சதாப்தி அதிவிரைவு ரயில் மற்றும் பெங்களூர் செல்லும் பிருந்தாவனம் ரயில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால் அவ்வழியாக செல்லும் மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டது.

image

அதேபோல் திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் வேலூரில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் அரக்கோணம் சென்னை சென்ட்ரல் மின்சார ரயில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் கடந்த ஒருமணி நேரத்துக்கும் மேலாக அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் காலை பணிக்குச் செல்லும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

image

சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு ஒரு மணி நேரம் காலதாமத்திற்கு பின்னால் இரு மார்க்கத்திலும் ரயில்கள் ஒரு மணி நேரம் கால தாமதத்திற்கு பின்னர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/147388/Signal-failure-Chennai-Arakkonam-route-trains-stop-here-and-there.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post