
காரைக்குடி அருகே சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்குக் கூறி போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பங்களாவில் ,நடிகர் அருள்நிதியின் 'மூர்க்கன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், நடிப்பதற்காக, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து துணை நடிகர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், துணை நடிகர்களுக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், அங்கு நின்ற படக்குழுவினரின் வாகனத்தை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சினிமா படக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்து துணை நடிகர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148307/Pay-salary-immediately-Agitation-by-protesting-film-supporting-actors.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post