Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரார்த்தனைக்கு வந்த இடத்தில் முற்றிய வாக்குவாதம்! மனைவியை கொன்று கணவனும் விபரீத முடிவு

உவரி பேருந்து நிறுத்தத்தில் வைத்து மனைவியை கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசியைச் சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவரின் மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் கோவிலுக்கு வந்துள்ளனர். அதன்பின் இருவரும் உவரி அந்திரேயா ஆலயம் எதிர்புறம் உள்ள உவரி பேருந்து பயணிகள் நிழல் கூடத்தில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது பின்பு வாக்குவாதம் முற்றவே கணவர் அந்தோணி பிச்சை மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றுவிட்டு, பின் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இது குறித்து உவரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த உவரி போலீசாரிடம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி பிச்சை, செய்கையில் பேப்பர் மற்றும் பேனாவை கேட்டு வாங்கி அதில் தனது பெயர் தனது மனைவி பெயர் தன்னுடைய சொந்த ஊரான சிவகாசியில் தான் குடியிருக்கும் முனீஸ்வரன் காலனி ஆகிய குறிப்பை அவரே எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

image

இது குறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கணவரே மனைவியைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உவரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/147206/The-husband-committed-suicide-after-killing-his-wife-at-the-place-of-prayer.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post