Translate

இந்த வலைப்பதிவில் தேடு

திருமணமாகி 4 மாதத்தில் நூதன முறையில் தற்கொலையா? அதிரவைத்த பட்டதாரி பெண்ணின் முடிவு


கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் பட்டதாரி பெண், நூதன முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரைச் சேர்ந்த திருவேங்கடசாமி - மரகதமணி தம்பதியரின் மகள் இந்து, பிஇ பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் நல்லகண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

image

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இருவருமே சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொலவகாளிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரில் உள்ள இந்துவின் பாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையில் பார்ப்பதற்காக வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் வீட்டிலிருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட இந்து இரவு வரை வெளியே வரவில்லை. இதனால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கழுத்து வரை முழுமையாக டேப் வைத்து ஒட்டிவிட்டு ஹீலியம் வாயுவை அந்த கவருக்குள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் போலீசார், இந்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் ஹீலியம் வாயு சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோபி கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/147393/Four-months-after-marriage-BE-graduate-commits-suicide-in-a-modern-way.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post