
திரைப்பட விமர்சகரும், மூவி டிராக்கருமான கௌசிக் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கௌசிக் ஒரு சாஃப்வேர் இன்ஜினியர். 2007 முதல் 2010 வரை சாப்ட்வேர் இன்ஜினியராக பற்றிய அவர் சினிமா துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அந்த வேலையை விட்டு வெளியேறினார். பின்னர் மணிபால் பல்கலைக் கழகத்தில் ’Media and Entertainment’ துறையில் MBA படித்து முடித்தார். பின்னர், தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் சினிமா பிரிவில் கண்டெண்ட் ரைட்டராக, தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிளாக் ரைட்டராக அறியப்பட்டவர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிக் ஆக இருப்பவர்.
இந்நிலையில், பெசண்ட் நகரில் வசித்து வந்த அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. நாளை மதியத்திற்கு மேல் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/145357/Film-critic--anchor-Kaushik-dies-of-sudden-heart-attack.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post