Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமா? இன்று நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

image

பின்னர் புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகள் விசாரணை நடத்தி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் நீதிபதி ஜெயசந்திரன் இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145430/Verdict-in-High-Court-today-in-the-case-filed-by-OPS-regarding-AIADMK-General-Committee.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post