Translate

இந்த வலைப்பதிவில் தேடு

மாணவிக்கு சாக்லெட் கொடுத்த மாணவன்: நிர்வாகத்தினர் கண்டித்ததால் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியில் பிரபல தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஈசிகாந்த் இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இந்த மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு சாக்லெட் கொடுத்ததாக கூறப்படுகிறது.

image

இதையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவனை அலுவலக அறைக்கு வரவழைத்து அவரை நிர்வாகிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் இரண்டாவது மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார் .

இதனையடுத்து மாணவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கை, கால்களில் லேசான காயம் மற்றும் மூக்கில் ரத்தம் வெளியேறிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாணவனை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/143640/Student-who-gave-chocolate-to-girl-student-Attempted-suicide-due-to-reprimand-from-management.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post