Translate

இந்த வலைப்பதிவில் தேடு

இரவில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு – கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

இரவில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.

image

இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு வரை பெய்த கன மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

image

இதனைத் தொடர்ந்து நேற்று இரவில் பெய்த பெரும் கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் அறிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/144276/Overnight-heavy-rain-Flooding-at-Kumbakkarai-waterfall-Bathing-prohibited.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post