
மாலத்தீவு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழப்பிற்கு காரணம் தற்கொலையா அல்லது காரில் போடப்பட்ட ஏசியா என உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை லாலி ரோடு சாலையில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனையிட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் கோவை பிஎன் புதூர் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது என்றும், இவர் கடந்த ஏழாம் தேதி அன்று மாலத்தீவு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் என்றும் தெரியவந்திருக்கிறது. மேலும் கடந்த மூன்று நாட்களாக மது அருந்திவிட்டு காரிலேயே உறங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட இந்தப் பகுதிக்கு பஷீர்அகமது எப்பொழுது வந்தார் என்றும் அவருடைய உயிர் இழப்பிற்கு காரணம் அதிக மது அருந்தியதா அல்லது காரில் போடப்பட்ட ஏசியின் காரணமாக உறங்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டதால் விளைந்த விபரீதமா என்ற கோணத்தில் கோவை ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144207/Police-investigation-on-person-who-died-after-spent-time-in-the-car-for-3-days.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post